Unnidathil Ennai Koduththen

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

Music Director: M. S. Viswanathan

Lyricists: Kannadasan

Singers: S. Janaki

பாடகி : எஸ். ஜானகி    இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : {உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்} (2)

பெண் : உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி…..

பெண் : உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்

பெண் : {காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது} (2)
{காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது} (2)

பெண் : இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்..ஆஆ…
தடுத்தால் கூட தருவேன்

பெண் : உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்

பெண் : வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது

பெண் : இனி ஒரு பிரிவேது அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே…ஆஅ….
இருவர் நிலையும் சிலையே

பெண் : உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்

பெண் : {ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது} (2)
{கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது} (2)

பெண் : என்னடி விளையாட்டு என்று
சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே…ஆஅ….
காலையில் கனவுகள் எங்கே

பெண் : உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி……………..

பெண் : உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்