Yaar Andha Nilavu

யார் அந்த நிலவு

Year: 1965

Music Director: Viswanathan–Ramamoorthy

Lyricists: Kannadasan

ஆண் : யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு

ஆண் : யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு

ஆண் : மாலையும் மஞ்சளும் மாறியதே
ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே
பெரும் வேதனை
தெய்வமே யாரிடம் யாரை
நீ தந்தாயோ
உன் கோவில் தீபம் மாறியதை
நீ அறிவாயோ
ஹோ……ஓ……கோயில் தீபம் மாறியாதை
நீ அறிவாயோ

ஆண் : யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு

ஆண் : ஆடிய நாடகம் முடிவதில்லை
ஒரு நாளிலே
அங்கும் இங்கும் சாந்தியில்லை
சிலர் வாழ்விலே
தெய்வமே யாருடன் மேடையில்
நீ நின்றாயோ
இன்று யாரை யாராய் நேரினிலே
நீ கண்டாயோ
ஹோ….ஓ….ஹோ…..ஹோஹோஹஓஹோ….
ஹோ…..ஹோஹஓஹோ…..

ஆண் : யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு
நான் வந்த வரவு