Kannanai ninnaikatha naalillaye

கண்ணனை நினைக்காத நாளில்லையே

Year:

Music Directors: M.S. Viswanathan (MSV)

Lyricist: Kannadasan

தமிழ்
English

 

 

பெண் : கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே

பெண் : கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
கண்ணா…….ஆ……..கண்ணா……..ஆ……
ஆண் : கண்ணன்தானே கண்ணன்தானே

ஆண் : ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை
ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை
செந்தூர ரேகை மின்னாமல் மின்னும்
சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு

பெண் : கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
ஆண் : கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
பெண் : கண்ணா………உன்னை மறப்பேனோ
நான் உன்னை மறப்பேனோ……

பெண் : கண்ணனை நினைக்காத நாளில்லையே
ஆண் : காதலில் துடிக்காத நாளில்லையே
பெண் : உண்ணும்போதும்
ஆண் : உறங்கும்போதும்
பெண் : எண்ணம் முழுதும் கண்ணன்தானே

பெண் : வெண்ணீலக் கண்கள் உள்ளாக நின்று
என்னோடு பேசும் உல்லாசம் கண்டு
வெண்ணீலக் கண்கள் உள்ளாக நின்று
என்னோடு பேசும் உல்லாசம் கண்டு
நாளாக ஆக தாளாது கண்ணா
நீ இல்லை என்றால் நான் என்ன பெண்ணா

ஆண் : கங்கா நதி வந்தால் வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
பெண் : கங்கா நதி வந்தால் வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
ஆண் : கண்ணே உன்னை மறப்பேனோ
நான் உன்னை மறப்பேனோ

இருவர் : கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே

குழு : ஜெய கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே