Oru Vaanavil pole

ஒரு வானவில் போலே

Year:

Music Directors: Ilaiyaraja

தமிழ்
English

ஆண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண் : ஒரு வானவில்…..

ஆண் : வளர் கூந்தலின் மணம் சுகம்
இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில்
புது ராகம் பாடவா

பெண் : மடி கொண்ட தேனை மனம் கொள்ள
வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல்
களிக்கின்ற கலைஞன் எங்கே

ஆண் : கலைகள் நீ கலைஞன் நான்
கவிதைகள் பாடவா

ஆண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண் : ஒரு வானவில்…..

பெண் : உனக்காகவே கனிந்தது
மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது
கலைக் கோயில் மல்லிகை

ஆண் : இனிக்கின்ற காலம் தொடராதோ
இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ
இனியெந்தன் வாழ்வும் உனது

பெண் : தொடர்கவே வளர்கவே
இது ஒரு காவியம்

பெண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
ஆண் : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்….
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
பெண் : ம்ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்

பெண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
ஆண் : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்….
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
பெண் : ம்ம்ம்….ம்ம்ம்…..ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ம்ம் ம்ம்ம்……