Pesuvathu Kiliya

பேசுவது கிளியா

Year: 1963

Music Directors: Viswanathan–Ramamoorthy

Lyricist: Kannadasan

தமிழ்
English

ஆண் : பேசுவது கிளியா இல்லை
பெண்ணரசி மொழியா
பேசுவது கிளியா இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா ஹோய்
பேசுவது கிளியா இல்லை
பெண்ணரசி மொழியா

பெண் : பாடுவது கவியா இல்லை
பாரி வள்ளல் மகனா
பாடுவது கவியா இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா ஹோய்
பாடுவது கவியா இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்.ஹோய்..
பாடுவது கவியா இல்லை
பாரி வள்ளல் மகனா

ஆண் : கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா
இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா
இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா

பெண் : வில்லேந்தும் காவலன்தானா
வேல் விழியாள் காதலன்தானா
வில்லேந்தும் காவலன்தானா
வேல் விழியாள் காதலன்தானா
சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் பாவலன்தானா

ஆண் : பேசுவது கிளியா இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண் : பாடுவது கவியா இல்லை
பாரி வள்ளல் மகனா

பெண் : மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா
உள்ளம் வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா.. ஹோய்
ஆண் : செண்டாடும் சேயிழைதானா
தெய்வீகக் காதலிதானா
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன் மொழிதானா

பெண் : பாடுவது கவியா இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.

ஆண் : பேசுவது கிளியா இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

Male Part

Pesuvathu kiliya illai
Pennarasi mozhiya
Pesuvathu kiliya illai
Pennarasi mozhiya
Kovil konda silaiya
Kothu malar kodiya hooi
Pesuvathu kiliya illai
Pennarasi mozhiya

Female Part

Paaduvathu kaviya illai
Paarivallal magana
Paaduvathu kaviya illai
Paarivallal magana
Seranukku urava
Senthamizhar nilava hooi
Paaduvathu kaviya illai
Paarivallal magana
Seranukku urava
Senthamizhar nilava
Hooi hooi hooi
Paaduvathu kaviya illai
Paarivallal magana

Male Part

Kalyana panthalil aadum thoranama
Illai kacheri rasirgal ketkum moganama
Kalyana panthalil aadum thoranama
Illai kacheri rasirgal ketkum moganama

Female Part

Villendhum kaavalan thaana
Vel vizhiyal kaadhalan thaana
Villendhum kaavalan thaana
Vel vizhiyal kaadhalan thaana
Sollamal sollum mozhiyil
Kottai kattum paavalan thaana

Male Part

Pesuvathu kiliya illai
Pennarasi mozhiya
Kovil konda silaiya
Kothu malar kodiya
Hooi hooi hooi
Female : Paaduvathu kaviya illai
Paarivallal magana

Female Part

Mannadhi mannargal
Koodum maaligaiya
Ullam vandattam maathargal
Koodum mandapama..hoi
Male : Sendadum seyizhai thaana
Theiveega kaadhali thaana
Senthooram konjum mugathil
Sevvai minnum thenmozhi thaana

Female Part

Paaduvathu kaviya illai
Paarivallal magana
Seranukku urava
Senthamizhar nilava
Hooi hooi hooi hooi

Male Part

Pesuvathu kiliya illai
Pennarasi mozhiya
Kovil konda silaiya
Kothu malar kodiya
Hooi hooi hooi hooi

Trivia: The song "Pesuvathu Kiliya" is based on Bilaskhani Todi raga. It contains multiple references to MGR through its lyrics "Paaduvadhu kaviyaa illai, paarivallal magana; Seranukku uravaa senthamizhar nilava"; the line "Seranukku uravaa" refers to Ramachandran's place of birth Kerala, "paari vallal" references his perceived generous nature, and "senthamizhar" gives emphasis to his Tamil pride.