Kanchi Pattuduthi

காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து

Movie: Vayasu Pom

Year:

Music Directors: M.S. Viswanathan (MSV)

Lyricist: Kannadasan

தமிழ்
English

பெண் : காஞ்சி பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
ஆ……ஆ…..ஓஹோய் ஓஹோய் ஒஹ்ஹொஹ்ஹோய்

ஆண் : காஞ்சி பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்

பெண் : னா……னா…..நனா நனா நனனனா

ஆண் : காஞ்சி பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும்
உன் அழகைப் பெறவேண்டும்
திருமகளும் உன் அழகை பெறவேண்டும்

ஆண் : தென் குமரி கடலினிலே
சிவந்த மாலை பொழுதினிலே
பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்

பெண் : ஆஅ…..ஆ……ஆ…..ஆஅ…..

ஆண் : தென் குமரி கடலினிலே
சிவந்த மாலை பொழுதினிலே
பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்

ஆண் : சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
நாம் சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்

ஆண் : காஞ்சி பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும்
உன் அழகைப் பெறவேண்டும்

ஆண் : தேனருவி கரையினிலே
திருக்குற்றால மலையினிலே
நீரருவி உடல் தழுவ குளிக்கணும்
நான் நெருங்கி வந்து
உன் அழகை ரசிக்கணும்

ஆண் : குங்குமம் போலவே
உன் முகம் மாறணும்
குங்குமம் போலவே
உன் முகம் மாறணும்
பொய் கோபம் கொண்டு
நீ விலகிப் போகணும்
பொய் கோபம் கொண்டு
நீ விலகிப் போகணும்

ஆண் : காஞ்சி பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும்
உன் அழகைப் பெறவேண்டும்

ஆண் : பூம்புகாரின் நாயகியாம்
புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளைச் சேர்க்கணும்

பெண் : ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ….ஆ….

ஆண் : பூம்புகாரின் நாயகியாம்
புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளைச் சேர்க்கணும்

ஆண் : மாமியார் வாழ்த்தணும் மற்றவர் போற்றணும்
மாமியார் வாழ்த்தணும் மற்றவர் போற்றணும்
இந்த மாநிலமே உன் புகழைப் பாடணும்
இந்த மாநிலமே உன் புகழைப் பாடணும்

ஆண் : காஞ்சி பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும்
உன் அழகைப் பெறவேண்டும்