Then malli poove

தேன்மல்லி பூவே

Movie: Thyagam

Year:

Music Directors: Ilaiyaraja

Lyricist: Kannadasan

தமிழ்
English

ஆண் : முத்தாரம் மார் மீது தவழ்கின்றது
எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு

பெண் : தேர் உண்டு நீ உண்டு திருநாள் உண்டு
திருமகள் நெஞ்சில் துயில் கொள்ளவா

ஆண் : உலகமெல்லாம் ஒரு நிலவு

பெண் : இதயமெல்லாம் ஒரு நினைவு
என் வாழ்வின் ஆனந்தம் நீயே

ஆண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே

பெண் : என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே

ஆண் : தேன்மல்லி பூவே…..

பெண் : செவ்வாழை பொன்மேனி துடிக்கின்றது
சிறு தொட்டில் தந்து உறங்க விடு

ஆண் : தித்திக்கும் செவ்வாயும் நனைகின்றது
சிறு முத்தம் தந்து மயங்கவிடு

பெண் : மலர்களிலே அணை அமைப்போம்

ஆண் : மன்மதனை துணைக்கழைப்போம்
இரவேது பகலேது கண்ணே

பெண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே

ஆண் : என் கண்ணே என் ராணி

பெண் : நீயின்றி நானில்லையே

ஆண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
தேன்மல்லி பூவே…..
பெண் : ஆ…..ஆ….ஆ….ம்ம்…..ம்ம்…..ம்ம்….
ஆ….ஆ…..ஆ…..