Ange Malai Mayakkam Yarukkaga

அங்கே மாலை மயக்கம் யாருக்காக

Year: 1967

Music Directors: M.S. Viswanathan (MSV)

Lyricist:

தமிழ்
English

பெண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

பெண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

ஆண் : ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு

ஆண் : கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

ஆண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

பெண் : கேட்டுக் கொள்வது காதலில் இனிமை
கேட்டால் தருவது காதலி கடமை
கேட்டுக் கொள்வது காதலில் இனிமை
கேட்டால் தருவது காதலி கடமை

பெண் : இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை

பெண் : லாலாலாலா லாலாலாலா லாலாலாலா…
லாலாலாலா லாலாலாலா லாலாலாலா…
ஆண் : ஆஹாஹாஹா
பெண் : ஓஹோஹஓஹோ
இருவர் : ஓஹோஹோஹோ
ஓஹோஹோஹோ

பெண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

Share this song

Advertisement

Discover more