Silar Sirippar silar Azhuvar
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
Year: 1961
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist:
Singers: T.M. Soundararajan (TMS)
ஆண் : காலம் பல கடந்து
அன்னை முகம் கண்டேனே
கண்ணீரும் புன்னகையும்
கலந்து வர நின்றேனே
ஆண் : ஒன்று பட வழியில்லையே
உண்மைக்கு மொழி இல்லையே
உள்ளம் திறந்து ஒரு சொல்
சொல்வதற்கும் முடியலையே
ஆண் : சிலர் சிரிப்பார் சிலர்
அழுவார் நான் சிரித்துக்கொண்டே
அழுகின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்
அழுவார் நான் சிரித்துக்கொண்டே
அழுகின்றேன்
ஆண் : சிலர் அழுவார் சிலர்
சிரிப்பார் நான் அழுதுகொண்டே
சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்
அழுவார் நான் சிரித்துக்கொண்டே
அழுகின்றேன்
ஆண் : பாசம் நெஞ்சில்
மோதும் அந்த பாதையை
பேதங்கள் மூடும் பாசம்
நெஞ்சில் மோதும் அந்த
பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன்
உரிமையில்லாமல் அழுகின்றேன்
ஆண் : சிலர் அழுவார் சிலர்
சிரிப்பார் நான் அழுதுகொண்டே
சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்
அழுவார் நான் சிரித்துக்கொண்டே
அழுகின்றேன்
ஆண் : கருணை பொங்கும்
உள்ளம் அது கடவுள் வாழும்
இல்லம் கருணை மறந்தே
வாழ்கின்றார் கடவுளைத்தேடி
அலைகின்றார்
ஆண் : சிலர் அழுவார் சிலர்
சிரிப்பார் நான் அழுதுகொண்டே
சிரிக்கின்றேன்
ஆண் : காலம் ஒரு நாள்
மாறும் நம் கவலைகள்
யாவும் தீரும் காலம் ஒரு
நாள் மாறும் நம் கவலைகள்
யாவும் தீரும் வருவதை
எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
ஆண் : சிலர் அழுவார் சிலர்
சிரிப்பார் நான் அழுதுகொண்டே
சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர்
அழுவார் நான் சிரித்துக்கொண்டே
அழுகின்றேன்
Trivia:
