Vanda Naal Mudal
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
Year: 1961
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist:
Singers: T.M. Soundararajan (TMS)
ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ
ஓஓ வந்த நாள் முதல்
இந்த நாள் வரை வந்த
நாள் முதல் இந்த நாள்
வரை வானம் மாறவில்லை
ஆண் : வான் மதியும் மீனும்
கடல் காற்றும் மலரும்
மண்ணும் கொடியும்
சோலையும் நதியும்
மாறவில்லை மனிதன்
மாறிவிட்டான்
ஆண் : ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே
விஷ்லிங் : ……………………………..
ஆண் : நிலை மாறினால்
குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும்
கூறுவான் அது வேதன்
விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
ஆண் : ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே
ஆண் : பறவையை கண்டான்
விமானம் படைத்தான்
பறவையை கண்டான்
விமானம் படைத்தான்
ஆண் : பாயும் மீன்களில்
படகினை கண்டான்
எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்
ஆண் : எதனை கண்டான்
பணம்தனை படைத்தான்
எதனை கண்டான் பணம்
தனை படைத்தான் மனிதன்
மாறிவிட்டான் மதத்தில்
ஏறிவிட்டான்
ஆண் : ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே
விஷ்லிங் : ……………………………..
ஆண் : இன்பமும் காதலும்
இயற்கையின் நீதி ஏற்ற
தாழ்வுகள் மனிதனின் ஜாதி
ஆண் : பாரில் இயற்கை
படைத்ததையெல்லாம்
பாவி மனிதன் பிரித்து
வைத்தானே மனிதன்
மாறிவிட்டான் மதத்தில்
ஏறிவிட்டான்
ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ
ஓஓ வந்த நாள் முதல்
இந்த நாள் வரை வானம்
மாறவில்லை
ஆண் : வான் மதியும் மீனும்
கடல் காற்றும் மலரும்
மண்ணும் கொடியும்
சோலையும் நதியும்
மாறவில்லை மனிதன்
மாறிவிட்டான்
ஆண் : ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓஹோ ஓ
விஷ்லிங் : ………………………
Trivia:
