Senthoor Murugan Kovilile
செந்தூர் முருகன் கோவிலிலே
Movie: Shanthi | சாந்தி
Year: 1965
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist:
Singers: P. Susheela | P.B. Srinivas (PBS)
பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
பெண் : கண்கள் இரண்டை வேலென எடுத்து
கையோடு கொண்டானடி
கண்கள் இரண்டை வேலென எடுத்து
கையோடு கொண்டானடி
கன்னியென் மனதில் காதல் கவிதை
சொல்லாமல் சொன்னானடி
பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
பெண் : ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் நின்றானடி
ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் நின்றானடி
வாராமல் வந்தவன் பாவை உடலை
சேராமல் சென்றானடி சேராமல் சென்றானடி
பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
ஆண் : நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாயகன் தானும் ஓலை வடிவில்
என்னோடு வந்தானடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
மன்னவன் என்னை மார்பில் தழுவி
வாழ்கெனச் சொன்னானடி
வாழ்கெனச் சொன்னானடி
ஆண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
Trivia:
