Chittukuruvi Mutham koduthu

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து

Year: 1964

Music Directors: Viswanathan–Ramamoorthy

Lyricist: Kannadasan

Singers: P. Susheela

தமிழ்
English

பெண் : { சிட்டுக்குருவி
முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திட கண்டேனே } (3)

பெண் : மொட்டு விரிந்த
மலரினிலே வண்டு
மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று
வந்து மோதிட கண்டேனே
ஹோய்

பெண் : சிட்டுக்குருவி
முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திட கண்டேனே

பெண் : ………………………..

பெண் : { பறந்து செல்ல
நினைத்து விட்டேன்
எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ
வந்தேன் பறவை
துணையில்லையே } (2)

பெண் : எடுத்து சொல்ல
மனமிருந்தும் வார்த்தை
வரவில்லையே என்னென்னவோ
நினைவிருந்தும் நாணம்
விடவில்லையே ஹோய்

பெண் : சிட்டுக்குருவி
முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திட கண்டேனே

பெண் : ………………………..

பெண் : ஒரு பொழுது
மலராக கொடியில்
இருந்தேனா ஒரு தடவை
தேன் கொடுத்து மடியில்
விழுந்தேனா

பெண் : இரவினிலே
நிலவினிலே என்னை
மறந்தேனா இளமை
தரும் சுகத்தினிலே
கன்னம் சிவந்தேனா
ஹோய்

பெண் : சிட்டுக்குருவி
முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திட கண்டேனே

Share this song

A