Tirupparam Kunrathil Nee irundhal

 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்

Year: 1967

Music Directors: K.V. Mahadevan

தமிழ்
English

பெண் : திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

பெண் : திருச்செந்தூரிலே வேலாடும்
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்
திருச்செந்தூரிலே வேலாடும்
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்

பெண் : திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

பெண் : பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்

பெண் : திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

பெண் : சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை

பெண் : திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

இருவர் : திருச்செந்தூரிலே வேலாடும்
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்
திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

Share this song