Naanamo Innum Naanamo

நாணமோ இன்னும் நாணமோ

Year: 1965

Music Directors: Viswanathan–Ramamoorthy

Lyricist: Vaali

தமிழ்
English

ஆண் : நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ

பெண் : ஓஓ… நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ

ஆண் : நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ

ஆண் : { தோட்டத்து
பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும்
சொல்லாதது } (2)

ஆண் : ஆடையில்
ஆடுது வாடையில்
வாடுது ஆனந்த
வெள்ளத்தில் நீராடுது
அது எது

பெண் : { ஆடவர் கண்களில்
காணாதது அது காலங்கள்
மாறினும் மாறாதது } (2)

பெண் : காதலன்
பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை
மூடுவது அது எது

பெண் : நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ

பெண் : { மாலையில்
காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே
மலர்ச்செண்டாவது } (2)

பெண் : காலையில்
நீரினில் ஆடிடும்
வேளையில் காதலி
எண்ணத்தில் தேனாவது
அது எது

ஆண் : { உண்டால்
மயக்கும் கல்லாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு
முள்ளாவது } (2)

ஆண் : நாளுக்கு நாள்
மனம் நாடுவது
ஞானியின் கண்களும்
தேடுவது அது எது

ஆண் : நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ

பெண் : ஓஓ… நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ

பெண் : ………………………….

Share this song