Yen enra kelvi
ஏன் என்ற கேள்வி
Year: 1965
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist: Vaali
Singers: T.M. Soundararajan (TMS)
ஆண் : { ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை } (2)
ஆண் : { பகுத்தறிவு
பிறந்ததெல்லாம்
கேள்விகள்
கேட்டதனாலே } (2)
ஆண் : { உரிமைகளை
பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள்
உள்ளதனாலே} (2)
ஆண் : ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
ஆண் : ……………………………
ஆண் : { ஓராயிரம்
ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின்
பொருள் மட்டும்
விளங்கட்டுமே } (2)
ஆண் : வருங்காலத்திலே
நம் பரம்பரைகள் நாம்
அடிமை இல்லை என்று
முழங்கட்டுமே
ஆண் : ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
ஆண் : { நீரோடைகள்
கோடையில் காய்ந்திருக்கும்
மழைகாலத்தில் வெள்ளங்கள்
பாய்ந்திருக்கும் } (2)
ஆண் : நம் தோள்
வலியால் அந்த நாள்
வரலாம் அன்று ஏழை
எளியவர்கள் நலம்
பெறலாம்
ஆண் : முன்னேற்றம்
என்பதெல்லாம் உழைப்பவர்
உழைப்பதனாலே
ஆண் : கடமைகளை
புரிவதெல்லாம் விடுதலை
வேண்டுவதாலே
ஆண் : { ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை } (2)
Trivia:
