Buddhiulla manithan ellam
புத்தியுள்ள மனிதனெல்லாம்
Movie: Annai I
Year: 1962
Music Directors: R. Sudarshanam
Lyricist: Kannadasan
Singers: Chandra Babu
ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம்
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை
ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம்
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை
ஆண் : பணமிருக்கும் மனிதரிடம்
மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம்
பணம் இருப்பதில்லை
ஆண் : பணமிருக்கும் மனிதரிடம்
மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம்
பணம் இருப்பதில்லை
ஆண் : பணம் படைத்த வீட்டினிலே
வந்ததெல்லம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு
சொந்தம் எல்லாம் துன்பம்
ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம்
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை
ஆண் : பருவம் வந்த அனைவருமே
காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே
மணம் முடிப்பதில்லை
ஆண் : பருவம் வந்த அனைவருமே
காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே
மணம் முடிப்பதில்லை
ஆண் : மணமுடித்த அனைவருமே
சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே
சேர்ந்து போவதில்லை
ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம்
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை
ஆண் : கனவு காணும் மனிதனுக்கு
நினைப்பதெல்லம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே
வருவதெல்லம் உறவு
ஆண் : கனவு காணும் மனிதனுக்கு
நினைப்பதெல்லம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே
வருவதெல்லம் உறவு
ஆண் : அவன் கனவில் அவள் வருவாள்
அவனை பார்த்து சிரிப்பாள்
அவன் கனவில் யார் வருவார்
யாரை பார்த்து அணைப்பார்
ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம்
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை
விசில் : ………………………
Trivia:
