Sirithu Sirithu ennai siraiyilittai
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
Year: 1961
Music Directors: K.V. Mahadevan
Lyricist: Kannadasan
Singers: P. Susheela | T.M. Soundararajan (TMS)
இருவர் : ஹ்ஹஹஹஹா…..
ஓஹோஹஓஹோ
ம்ம்ஹும்…..ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்…ம்ம்ம்….
ஆண் : சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து
கதை படித்தாய்
பெண் : நினைத்து நினைத்து நெஞ்சில்
அடைத்து விட்டாய்
பக்கம் நெருங்கி நெருங்கி
இன்பச் சுவை கொடுத்தாய்
ஆண் : சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து
கதை படித்தாய்
பெண் : நினைத்து நினைத்து நெஞ்சில்
அடைத்து விட்டாய்
பக்கம் நெருங்கி நெருங்கி
இன்பச் சுவை கொடுத்தாய்
ஆண் : சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
பெண் : ஓஹோஹோ……ஓஓ…..ஓஒ….
ஆண் : பழகப் பழக வரும் இசை போலே
தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே
பழகப் பழக வரும் இசை போலே
தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே
பெண் : அருகில் அருகில் வந்த உறவினிலே
மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
ஆண் : ம்……ஹும்…..
பெண் : அருகில் அருகில் வந்த உறவினிலே
மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
ஆண் : சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
பெண் : ஆஹஅஹஹா……ஆஅ……
ஆண் : இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
பெண் : எளிமை பெருமை எது வந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
ஆண் : ம்…..ஹும்….ஹும்…..
பெண் : எளிமை பெருமை எது வந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
இருவர் வழியும் ஒன்றே
ஆண் : சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
பெண் : ஆஹா……
ஆண் : இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
பெண் : இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
ஆண் : ம்….ஹும்…..
பெண் : இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
ஆண் : சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து
கதை படித்தாய்
பெண் : நினைத்து நினைத்து நெஞ்சில்
அடைத்து விட்டாய்
பக்கம் நெருங்கி நெருங்கி
இன்பச் சுவை கொடுத்தாய்
ஆண் : சிரித்துச் சிரித்து
என்னைச் சிறையிலிட்டாய்
இருவர் : {ஆஆஹா…..ஹா…..ஹ…..ஹா….
ஆஆஹா…..ஹா…..ஹ…..ஹா….
பெண் : ஆ…..ஆ……ஆ…..} (2)
Trivia:
