Poyum Poyum Manithanukkintha

போயும் போயும் மனிதனுக்கிந்த

Year: 1961

Music Directors: K.V. Mahadevan

Lyricist: Kannadasan

தமிழ்
English

ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே

ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

ஆண் : கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்

ஆண் : பாயும் புலியின் கொடுமையை
இறைவன் பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே
இந்த பாழும் மனிதன்
குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே
இதய போர்வையில் மறைத்தானே

ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

விசில் : ……………………………………….

ஆண் : கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்றவன் கூறுகிறான்
கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே

ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

Share this song

Advertisement

Discover more
Movies