Andhi Mazhai Megam
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும்
Movie: Nayakan | நாயகன்
Year: 1987
Music Directors: Ilaiyaraja
Lyricist: Pulamaipithan
Singers: P. Susheela | T L Maharajan
ஆண் : அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்
பெண் : ஹோய் இடி கொட்டு மேளம்
அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
குழு : தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்
பெண் : அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்
பெண் : நீர் நடக்கும் பாதை
எங்கும் நஞ்சையானது
குழு : தனக்க தீம்
ஆண் : நாம் நடக்கும் பாதை எங்கும்
பஞ்சம் போனது
குழு : தனக்க தீம்
பெண் : மாடங்கள் கலைகூடங்கள்
யார் செய்தார் அதை நாம் செய்தோம்
ஆண் : நாடாளும் ஒரு ராஜாங்கம்
யார் தந்தார் அதை நாம் தந்தோம்
பெண் : தேசம் என்னும் சோலையில்
வேர்கள் நாங்களே
ஆண் : தியாகம் என்னும் ஜோதியில்
தீபம் நாங்களே
குழு : தாம்தனத்தோம் தீம்தனத்தோம்
ராகம் பாடுவோம்
பெண் : அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்
ஆண் : ஹேய் இடி கொட்டு மேளம்
அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
குழு : தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்
குழு : ஹோ..ஓஓ..ஓஒ..ஓஹோ…
ஹோ..ஓஓ..ஓஒ..ஓஹோ…
ஆண் : பால் குடங்கள் தேன்குடங்கள்
நூறு வந்தது
குழு : தனக்க தீம்
பெண் : கை வணங்கும் தெய்வம் ஒன்று
நேரில் வந்தது
குழு : தனக்க தீம்
ஆண் : பூவாரம் இனி சூட்டுங்கள்
கற்பூரம் இனி ஏற்றுங்கள்
பெண் : ஊரெல்லாம் களி ஆட்டங்கள்
என்னென்ன இனி காட்டுங்கள்
ஆண் : வீடுதோரம் மங்களம்
இன்று வந்தது
பெண் : காணும் போது நெஞ்சினில்
இன்பம் வந்தது
குழு : தாம்தனத்தோம் தீம்தனத்தோம்
ராகம் பாடுவோம்
ஆண் : அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்
பெண் : எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்
ஆண் : ஹேய் இடி கொட்டு மேளம்
பெண் : அது கொட்டும் நேரம்
ஆண் மற்றும் பெண் :
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
குழு : தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்
குழு : அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும் திரு நாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்
Trivia:
