Kunguma Pottin Mangalam

குங்கும பொட்டின் மங்களம்

Music Director: M. S. Viswanathan

Lyricists: Roshanara Begum

ஆண் : குங்கும பொட்டின் மங்களம்
{ நெஞ்சம் இரண்டின் சங்கமம் } (2)
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

பெண் : குங்கும பொட்டின் மங்களம்
{ நெஞ்சம் இரண்டின் சங்கமம் } (2)
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

ஆண் : எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்

பெண் : ஆஆஆஆ

ஆண் : தித்திக்கும் இதழ் மீது மோகம்
தந்ததே மான்தளிர் மேகம்

ஆண் : தந்ததே மான்தளிர்
மேகம் தேகம் தேகம் தேகம்

பெண் : மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம்
தினம் சந்திக்க சந்திக்க இன்பம்

பெண் : பெண்ணான பின்பு என்னை தேடி
கொண்டதே எண்ணங்கள் கோடி
கொண்டதே எண்ணங்கள் கோடி கோடி கோடி

ஆண் : குங்கும பொட்டின் மங்களம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்

ஆண் & பெண் : நெஞ்சம் இரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

ஆண் : தங்கம் மங்கும் நிறமான மங்கை அங்கும்
எங்கும் ஆனந்த கங்கை

ஆண் : ஜில் என்னும் குளிர் காற்று வீசும்
மெளனமே தான் அங்கு பேசும் மெளனமே தான்
அங்கு பேசும் பேசும் பேசும்

பெண் : மண்ணில் சொர்க்கம் கண்டிந்த
உள்ளம் விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்

பெண் : கற்பனை கடலான போது
சென்றதே பூந்தென்றல் தூது

சென்றதே பூந்தென்றல்
தூது தூது தூது

ஆண் & பெண் : குங்கும பொட்டின் மங்களம்
{ நெஞ்சம் இரண்டின் சங்கமம் } (2)
இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்