Anbe Amudhe Arunganiye
அன்பே அமுதே அருங்கனியே
Movie: Uttama Puthiran |
Year: 1958
Music Directors: G. Ramanathan
Lyricist: Maruthakasi
Singers: P. Susheela | T.M. Soundararajan (TMS)
ஆண் : அன்பே
பெண் : ம்ம்
ஆண் : அமுதே
பெண் : ம்ஹும்…..
ஆண் : அருங்கனியே
ஆண் : அன்பே அமுதே அருங்கனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
ஆண் : அன்பே அமுதே அருங்கனியே
ஆண் : எண்ணமெல்லாம் நிறைந்தே
கண்ணே….ஏ….ஏ…..
ஏ…..ஏ……ஏ……..
ஆண் : எண்ணமெல்லாம் நிறைந்தே
நீயே இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே
எண்ணமெல்லாம் நிறைந்தே
நீயே இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே
கன்னல் மொழி பேசி கண்ணால் வலைவீசி
கன்னல் மொழி பேசி கண்ணால் வலைவீசி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி
ஆண் : அன்பே அமுதே அருங்கனியே
பெண் : என்ன தவம் செய்தேன்
கண்ணா…..ஆ….ஆஅ……
ஆ…….ஆ……ஆ……
பெண் : என்ன தவம் செய்தேன் கண்ணா
உன்னுடன் உறவாட ஆசை மன்னா
என்ன தவம் செய்தேன் கண்ணா
உன்னுடன் உறவாட ஆசை மன்னா
ஆண் : இருவரும் ஒன்றானோம்
மதுவுண்ணும் வண்டானோம்
இருவரும் ஒன்றானோம்
மதுவுண்ணும் வண்டானோம்
பெண் : ஸ்வாமி….
ஆண் : கண்ணே…..
பெண் : ஸ்வாமி…..
ஆண் : கண்ணே…..
பெண் : இதுவே பேரின்பம்
இருவர் : அன்பே அமுதே அருங்கனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
ஆண் : அன்பே அமுதே அருங்கனியே
Trivia:
