Chithira Poovizhi Vaasalile Vanthu

சித்திர பூவிழி வாசலிலே வந்து

Year: 1963

Music Directors: Viswanathan–Ramamoorthy

Lyricist: Mayava nathan

தமிழ்
English

பெண் : {சித்திரப் பூ விழி வாசலிலே
வந்து யார் நின்றவரோ

பெண் : இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்திட யார் வந்தவரோ

பெண் : யார் நின்றவரோ
பெண் : யார் வந்தவரோ} (2)

பெண் : தென்றல் அழைத்து வர
தங்க தேரினில் வந்தாரே
தென்றல் அழைத்து வர
தங்க தேரினில் வந்தாரே
புன்னகை மின்னிட வந்து அருகினில்
நின்றவர் என்னவரே
இடம் தந்த என் மன்னவரே

பெண் : சித்திரப் பூ விழி வாசலிலே
அவர்தான் நின்றவரே
இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்தவர்தான் என்னவரே
யார் நின்றவரோ அவர்தான் என்னவரே

பெண் : {கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ இந்த
பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ} (2)

பெண் : உன்னை மட்டும் அருகினில் வைத்து
தினம் தினம் சுற்றி வருபவரோ
இனி கற்றுக் கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்
முத்தமிழ் வித்தகரோ
கலை முற்றும் அறிந்தவரோ
காதல் மட்டும் தெரிந்தவரோ

பெண் : சித்திரப் பூ விழி வாசலிலே
வந்து யார் நின்றவரோ
இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்திட யார் வந்தவரோ

பெண் : {வண்ணக் கருவிழி தன்னில் வரும் விழி
என்று அழைப்பதுவோ
பசும் பொன்னிற் புதியதை கண்ணன் என பெயர்
சொல்லி துதிப்பதுவோ} (2)

பெண் : ஒளி மின்னி வரும் இரு கண்ணசைவில் கவி
மன்னவன் என்பதுவோ இல்லை
தன்னைக் கொடுத்தனை தன்னில் மறைத்தவர்
வண்ணப் புது மலரே
அவர் நெஞ்சம் மலரில்லையே
மனம் எங்கும் நிறைந்தவரே

பெண் : ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஒ ஓ
ஹோஹோ ஓஒ ஹோ ஓஓஒ

பெண் : சித்திரப் பூ விழி வாசலிலே
அவர்தான் நின்றவரே
இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்தவர்தான் என்னவரே
யார் நின்றவரோ அவர்தான் என்னவரே