Ennai Yaar Enru Enni Enni
என்னை யாரென்று எண்ணி எண்ணி
Year: 1961
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist: Kannadasan
Singers: P. Susheela | T.M. Soundararajan (TMS)
ஆண் : { என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய் இது யார்
பாடும் பாடல் என்று நீ
கேட்கிறாய் } (2)
ஆண் : நான் அவள் பேரை
தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த
மொழி அல்லவா
ஆண் : என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய் இது யார்
பாடும் பாடல் என்று நீ
கேட்கிறாய்
பெண் : { என்றும் சிலையான
உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும்
மலராதய்யா } (2)
பெண் : கனவான கதை
மீண்டும் தொடராதய்யா
கனவான கதை மீண்டும்
தொடராதய்யா காற்றான
அவள் வாழ்வு திரும்பாதய்யா
பெண் : என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய் இது யார்
பாடும் பாடல் என்று நீ
கேட்கிறாய் என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய்
ஆண் : { எந்தன் மனக்கோயில்
சிலையாக வளர்ந்தாலம்மா
மலரோடு மலராக
மலர்ந்தாலம்மா } (2)
ஆண் : கனவென்னும்
தேரேறி பறந்தாலம்மா
கனவென்னும் தேரேறி
பறந்தாலம்மா காற்றோடு
காற்றாக கலந்தாலம்மா
ஆண் : என்னை யாரென்று
எண்ணி எண்ணி நீ
பார்க்கிறாய் இது யார்
பாடும் பாடல் என்று நீ
கேட்கிறாய்
பெண் : இன்று உனக்காக
உயிர் வாழும் துணை
இல்லையா அவள் ஒளி
வீசும் எழில் கொண்ட
சிலையில்லையா
பெண் : அவள் வாழ்வு
நீ தந்த வரமல்லவா
அவள் வாழ்வு நீ தந்த
வரமல்லவா அன்போடு
அவளோடு மகிழ்வாய்
ஐயா
ஆண் & பெண் : என்னை
யாரென்று எண்ணி
எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல்
என்று நீ கேட்கிறாய்
பெண் : என்னை
யாரென்று எண்ணி
எண்ணி நீ பார்க்கிறாய்
Trivia:
