Kannan oru kaikuzhandai
கண்ணன் ஒரு கைக்குழந்தை
Movie: Badrakali
Year: 1976
Music Directors: Ilaiyaraja
Lyricist: Vaali
Singers: K.J. Yesudas | P. Susheela
பெண் : கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
பெண் : கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
ஆண் : உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
பெண் : உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
ஆண் : ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
பெண் : அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லை அது
ஆண் : காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா
பெண் : மஞ்சள் கொண்டு நீராடி
மொய் குழலில் பூ சூடி
ஆண் : வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒரு கோடி
பெண் : மஞ்சள் கொண்டு நீராடி
மொய் குழலில் பூ சூடி
ஆண் : வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒரு கோடி
பெண் : கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா
கண்கள் பாட கூடும் என்று
பொட்டு ஒன்று வைக்கட்டுமா
பெண் : கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
ஆண் : கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
பெண் : கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
ஆண் : மைவிழியே தாலேலோ
பெண் : மாதவனே தாலேலோ
ஆராரிரோ
ஆண் : ஆராரிரோ
பெண் : ஆராரிரோ
ஆண் : ஆராரிரோ
இருவர் : ஆராரிரோ
Trivia:
