Paarvai Ondrae Podumae

பார்வை ஒன்றே போதுமே

Movie:

Year: 1966

Music Directors: Vedha

Lyricist: Kannadasan

தமிழ்
English

பெண் : ஹா…ஹாஹாஹாஹா ஹா ….

ஆண் : பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா

பெண் : பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா

ஆண் : பார்வை ஒன்றே போதுமே !

ஆண் : காதல் திராட்சை கொடியிலே
கள்ளோடு ஆடும் கனியிலே
ஊறும் இன்பக் கடலிலே
உன்னோடு நானும் ஆடவா

பெண் : அப்போது நெஞ்சம் ஆறுமா
எப்போதுமே கொண்டாடுமா

ஆண் : பார்வை ஒன்றே போதுமே

பெண் : ஆசை கைக‌ள் அழைப்பிலே
அஞ்சாம‌ல் சேரும் அணைப்பிலே
வாழை மேனி வாடுமே
அம்ம‌ம்மா போதும் போதுமே

ஆண் : இல்லாம‌ல் நெஞ்ச‌ம் ஆறுமா
இல்லாவிட்டால் பெண் ஆகுமா

பெண் : பார்வை ஒன்றே போதுமா

ஆண் : கால‌ம் என்னும் காற்றிலே
க‌ல்யாண‌ வாழ்த்துப் பாட்டிலே
பெண் : ஒன்று சேர்ந்து வாழலாம்
உல்லாச‌ வான‌ம் போக‌லாம்

இருவரும் : அப்போது நெஞ்ச‌ம் ஆறுமே
எப்போதுமே கொண்டாடுமே

ஆண் : பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா

பெண் : பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா

இருவரும் : பார்வை ஒன்றே போதுமே

Female: Haa ..hahahahaha..haa
Male: Paarvai ondrae podhumae
Pallaayiram soll vendumaa
Paarvai ondrae podhumae
Pallaayiram soll vendumaa

Female:
Pesaadha kannum pesumaa
Penn vendumaa paarvai podhumaa
Male: Paarvai ondrae podhumae
Kaadhal thraatchai kodiyilae
Kallodu aadum kaniyilae
Oorum inba kadalilae
Unnodu naanum aadavaa
Female Part

Appodhu nenjam aarumaa
Eppodhumae kondaadumaa

Male Part

Paarvai ondrae podhumae

Female Part

Aasai kaigal azhaippilae
Anjaamal serum anaippilae
Vaazhai maeni vaadumae
Ammammaa podhum podhumae

Male Part

Illaamal nenjma aarumaa
Illavittaal pen aagumaa

Female Part

Paarvai ondrae podhumae

Male Part

Kaalam ennum kaattrilae
Kalyaana vaazhthu paatilae

Female Part

Ondru sernthu vaazhalaam
Ullaasa vaanam poghalam

Both : Appaodhu nenjam aarumae
Eppodhumae kondaadumae

Male Part

Paarvai ondrae podhumae
Pallaayiram soll vendumaa

Female Part

Pesaadha kannum pesumaa
Penn vendumaa paarvai podhumaa

Both : Paarvai ondrae podhumae