Palirukkum Pazhamirukkum

பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது

Year: 1961

Music Directors: Viswanathan–Ramamoorthy

Lyricist: Kannadasan

Singers: P. Susheela

தமிழ்
English

பெண் : பாலிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பழமிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பசியிருக்காது

ஆண் : ஓஹோ

பெண் : பஞ்சணையில்
காற்று வரும் தூக்கம்
வராது

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் : பஞ்சணையில்
காற்று வரும் தூக்கம்
வராது

பெண் : நாலு வகை
குணமிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்
பெண் : ஆசை விடாது

பெண் : நாலு வகை
குணமிருக்கும் ஆசை
விடாது

பெண் : நடக்க வரும்
கால்களுக்கும்
துணிவிருக்காது

பெண் : பாலிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பழமிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பசியிருக்காது

ஆண் : ஓஹோ

பெண் : பஞ்சணையில்
காற்று வரும்
{ தூக்கம் வராது } (2)

பெண் : கட்டவிழ்ந்த
கண்ணிரண்டும் உங்களை
தேடும் பாதி கனவு வந்து
மறுபடியும் கண்களை மூடும்

ஆண் : ………………….

பெண் : கட்டவிழ்ந்த
கண்ணிரண்டும் உங்களை
தேடும் பாதி கனவு வந்து
மறுபடியும் கண்களை மூடும்

பெண் : பட்டு நிலா
வான் வெளியில்
காவியம் பாடும்
கொண்ட பள்ளியறை
பெண் மனதில்
போர்க்களமாகும்

ஆண் : ………………….

பெண் : பாலிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பழமிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பசியிருக்காது

ஆண் : ஓஹோ

பெண் : பஞ்சணையில்
காற்று வரும்
{ தூக்கம் வராது } (2)

பெண் : காதலுக்கு
ஜாதியில்லை
மதமுமில்லையே
கண்கள் பேசும்
வார்த்தையிலே
பேதமில்லையே

ஆண் : ………………….

பெண் : காதலுக்கு
ஜாதியில்லை
மதமுமில்லையே
கண்கள் பேசும்
வார்த்தையிலே
பேதமில்லையே

பெண் : வேதமெல்லாம்
காதலையே மறுப்பதில்லையே
அது மேகம் செய்த உருவம்
போல மறைவதில்லையே

பெண் : பாலிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பழமிருக்கும்

ஆண் : ம்ம்ஹ்ம்

பெண் : பசியிருக்காது

ஆண் : ஓஹோ

பெண் : பஞ்சணையில்
காற்று வரும்
{ தூக்கம் வராது } (2)

ஆண் : ………………….

ஆண் & பெண் : பாலிருக்கும்
பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும்
தூக்கம் வராது

 

Share this song