Pattu selai kathada

ஆண் : பட்டுச்சேலை காத்தாட

Year: 1961

Music Directors: K.V. Mahadevan

Lyricist: Kannadasan

தமிழ்
English

ஆண் : பட்டுச்சேலை காத்தாட
பருவமேனி கூத்தாட
பட்டுச்சேலை காத்தாட
பருவமேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே

பெண் : அரும்பு மீசை துள்ளி வர
அழகுப் புன்னகை அள்ளி வர
அரும்பு மீசை துள்ளி வர
அழகுப் புன்னகை அள்ளி வர
குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

ஆண் : கையில் எடுத்தால் துவண்டு விடும்
கன்னம் இரண்டும் சிவந்து விடும்
கையில் எடுத்தால் துவண்டு விடும்
கன்னம் இரண்டும் சிவந்து விடும்
சின்ன இடையே சித்திரமே
சிரிக்கும் காதல் நித்திலமே

பெண் : நிமிர்ந்து நடக்கும் நடையழகு
நெருங்கிப் பழகும் கலையழகு
நிமிர்ந்து நடக்கும் நடையழகு
நெருங்கிப் பழகும் கலையழகு
அமைதியில் நிறையும் முகத்தழகு
யாவும் உந்தன் தனியழகு

ஆண் : கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே

பெண் : குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

ஆண் : உறங்கினாலும் விழித்தாலும்
ஊர்கள் தோறும் அலைந்தாலும்
உறங்கினாலும் விழித்தாலும்
ஊர்கள் தோறும் அலைந்தாலும்
மயங்க வைத்தது ஒரு முகமே
மங்கை உந்தன் திருமுகமே

பெண் : காசு பணங்கள் கேட்கவில்லை
ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை
காசு பணங்கள் கேட்கவில்லை
ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை
தாவி வந்தது என் மனமே
இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே

ஆண் : கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே
பட்டுச்சேலை காத்தாட
பருவமேனி கூத்தாட

பெண் : குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

Share this song