Pon enben Siru Poo enben
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
Year: 1962
Music Directors: Viswanathan–Ramamoorthy
Lyricist:
Singers: P.B. Srinivas (PBS) | S. Janaki
ஆண் : பொன் என்பேன் சிறு பூவென்பேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
பெண் : என்னென்பேன் கலை ஏடென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன்
இருவர் : ………………………
ஆண் : கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்
கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்
பெண் : தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்
தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்
ஆண் : உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
பெண் : நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்
நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்
பெண் : ஆஅ….ஆஅ….
ஆண் : பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
பெண் : சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்
சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்
ஆண் : கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்
கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்
பெண் : உம்மை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன்
ஆண் : கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன்
ஆண் : ஆஅ….ஆ…..
பெண் : என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன்
Trivia:
