Ponnezhil poothathu pudhu vaanil

பொன்னெழில் பூத்தது புது வானில்

Movie:

Year:

Music Directors: M.S. Viswanathan (MSV)

தமிழ்
English

ஆண் : சிவகாமி சிவகாமி …
பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ

ஆண் : பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்

ஆண் : பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

ஆண் : தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண்பட்டு புண்பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்

ஆண் : பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

ஆண் : முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே

பெண் : பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா

பெண் : பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா

பெண் : பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா

பெண் : தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் கொண்டாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு

பெண் : பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா

பெண் : என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின் தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ

பெண் : பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா

இருவரும் : ஆஆஆஆ…ஆஹாஹா…..
ஆஆஆஆஹா..ஆஆஆஆ…ஆஹாஹா…..