Poyum Poyum Manithanukkintha
போயும் போயும் மனிதனுக்கிந்த
Year: 1961
Music Directors: K.V. Mahadevan
Lyricist: Kannadasan
Singers: T.M. Soundararajan (TMS)
ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே
ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
ஆண் : கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்
ஆண் : பாயும் புலியின் கொடுமையை
இறைவன் பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே
இந்த பாழும் மனிதன்
குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே
இதய போர்வையில் மறைத்தானே
ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
விசில் : ……………………………………….
ஆண் : கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்றவன் கூறுகிறான்
கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்
ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
இறைவன் புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே
ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே
Trivia:
