Thullatha manamum thullum

துள்ளாத மனமும் துள்ளும்

Year:

Music Directors: A.M. Raja

Singers: Jikki

தமிழ்
English

பெண் : ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : { துள்ளாத
மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள்
சொல்லும் கில்லாத
ஆசையை கிள்ளும்
இன்ப தேனையும்
வெல்லும் இசை
இன்ப தேனையும்
வெல்லும் } (2)

பெண் : { துன்ப கடலை
தாண்டும் போது தோணி
ஆவது கீதம் } (2)
அன்பு குரலில் அமுதம்
கலந்தே அருந்த தருவது
கீதம்

பெண் : எங்கும் சிதறும்
எண்ணங்களையும் இழுத்து
வருவது கீதம் இணைத்து
மகிழ்வதும் கீதம் துயர்
இருளை மறைப்பதும்
கீதம்

பெண் : துள்ளாத
மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள்
சொல்லும் கில்லாத
ஆசையை கிள்ளும்
இன்ப தேனையும்
வெல்லும் இசை
இன்ப தேனையும்
வெல்லும்

பெண் : { சோர்ந்த பயிரும்
நீரை கண்டால் தோகை
விரித்தே வளர்ந்திடும் } (2)
சாய்ந்த கொடியும் கிளையை
கண்டால் தாவி அணைத்தே
படர்ந்திடும்

பெண் : மங்கை இதயம்
நல்ல துணைவன் வரவு
கண்டே மகிழ்ந்திடும் உறவு
கொண்டால் இணைந்திடும்
அதில் உண்மை இன்பம்
விளைந்திடும்

பெண் : துள்ளாத
மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள்
சொல்லும் கில்லாத
ஆசையை கிள்ளும்
இன்ப தேனையும்
வெல்லும் இசை
இன்ப தேனையும்
வெல்லும்